தீமையின் இருள் நீங்கி அனைவரது வாழ்விலும் நன்மையின் ஒளி வீசட்டும் - தமிழிசை வாழ்த்து!

 
tamilisai tamilisai

கார்த்திகை தீப திருநாளான இன்று தீமையின் இருள் நீங்கி அனைவரது வாழ்விலும் நன்மையின் ஒளி வீசட்டும் என தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கார்த்திகை தீப திருவிழாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும் திருவிழாக்களில் ஒன்று கார்த்திகை தீபத் திருவிழா. இந்த இனிமையான நாளில் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த #கார்த்திகைத்தீபத்திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அனைவரது வீடுகளிலும் ஆலயங்களிலும் ஏற்றப்படும் தீபஒளி உலகில் தீமைகளை அகற்றி நன்மை பெருக வழி செய்யட்டும். "தீமையின் இருள் நீங்கி அனைவரது வாழ்விலும் நன்மையின் ஒளி வீசட்டும்" என்று கூறி அனைவருக்கும் #கார்த்திகை_தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள் என தமிழிசை சௌந்தரராஜன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.