தயாளு அம்மாளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் ஆளுநர் தமிழிசை

 
tn

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

tn

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு அவரது துணைவியார் தயாளு அம்மாள் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வருகிறார். உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக வெளிநிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வரும் அவரை குடும்பத்தினர் தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.  இந்த சூழலில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு கோபாலபுரம் பகுதியில் உள்ள கோவிலுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை நேற்று வருகை புரிந்திருந்தார்.  அப்போது முதல்வர் ஸ்டாலினின் சகோதரி செல்வியை மரியாதை நிமித்தமாக தமிழிசை சந்தித்து பேசினார். அத்துடன் முதல்வர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாவிடமும் அவர் நலம் விசாரித்தார்.



இதுகுறித்து தெலுங்கானா ஆளுநரும்,  புதுச்சேரி துணைநிலை ஆளுநரும் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் ,  "கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோபாலபுரம் கிருஷ்ணர் கோயில் சென்றேன். திரும்பும்போது தமிழக முதல்வர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரி திருமதி.தமிழ்ச்செல்வி அவர்களை சந்தித்தேன்.மரியாதை நிமித்தமாக இல்லத்திற்கு சென்று  திருமதி.தயாளு அம்மாளை சந்தித்து உடல் நலம் விசாரித்தேன். இதற்கு முன்பு மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுடன் கலைஞர் அவர்களின் உடல் நலம் விசாரிக்க  இதே இல்லத்திற்கு நான் வந்த நினைவு நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.