விஜய் பேச்சு எதுகை, மோனைக்கு தான் சரியாக இருக்கும் - தமிழிசை பேட்டி

 
Tamilisai

படத்திற்கு பல மொழி வேண்டும். ஆனால் பாடத்திற்கு பல மொழிகள் கூடாதா..? என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழக பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமாகிய தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பாஜகவை விமர்சித்து பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:  எதுகை, மோனைக்கு வேண்டுமானால் விஜய் பேசுவது சரியாக இருக்கும். 

விஜய், முதலில் திமுக எதிர்ப்பை தீவிரப்படுத்த வேண்டும். விஜய்யின் படம் தெலுங்கில் டப்பிங் ஆகிறது, பிற மாநிலங்களில் ஓகோ என ஓடுகிறது. படத்திற்கு பல மொழி வேண்டும். ஆனால் பாடத்திற்கு பல மொழிகள் கூடாதா..? களத்தில் விஜய் எதிரில் இல்லை. விஜய்யின் பேச்சில் தெளிவற்ற தன்மை தான் உள்ளது என கூறினார்.