விஸ்வகர்மா திட்டத்தை குல கல்வி திட்டம் என விமர்சிப்பதா? - உதயநிதிக்கு தமிழிசை பதிலடி

 
tamilisai tamilisai

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை மீண்டும் குல கல்வித் திட்டம் என விமர்சித்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலினின்
செய்திக்கு பாஜக முன்னாள் மாநிலத்தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். 

குடும்ப அரசியலால் துணை முதல்வரான மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி அவர்களே கைவினைக் கலைஞர்களுக்கு வாழ்வளிக்கும் திட்டமான விஷ்வகர்மா திட்டத்தை தவறான புரிதலோடு குல கல்வி என்று பழைய கஞ்சியை புது மந்தையில் போட்டு மீண்டும் கைவினை கலைஞர்களில் வாழ்வாதாரத்தை சீர்குலைக்க முனைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்... இந்த திட்டம் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களால்
நலிவடைந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய கைவினை கலைஞர்களுக்கான வாழ்விற்கும், சாப்பாட்டிற்கும் திண்டாடும் மக்கள் அவர்களுக்கு தெரிந்த தொழிலை ஊக்குவித்து சுயமாக சம்பாதித்து தான் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்கான திட்டமாகும். இதை குறுகிய அரசியல் பார்வையுடன் அதை தடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்... ஏனென்றால் அவர்களில் பலர் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான உணவு,இருப்பிடம், வேலைவாய்ப்பு, போன்றவற்றிற்காக கஷ்டப்படுவோருக்கு கடனுதவி வழங்கி காப்பது தான் இந்த திட்டம்.

Udhayanidhi

நீங்கள் சொல்வது போல் யாரையும் கல்லூரி படிப்பை தொடர விடாமல் இருப்பதற்கு இந்தத் திட்டம் இல்லை. குடும்ப அரசியலின் வாரிசு ஆன நீங்கள் குலக்கல்வி திட்டம் என்று இதை சிறுமைப்படுத்த வேண்டாம். தாங்கள் இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக சென்னை சுற்றிலும் விருகம்பாக்கம் குரோம்பேட்டை போன்ற பகுதிகளிலும் பல பேர் கழிவுநீர் கலந்த குடிநீரால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தும் உள்ளனர் தங்கள் துணை முதலமைச்சராக மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையிலும் நடந்து கொண்டு இது போன்ற தேவையற்ற அரசியலில் கவனம் செலுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.