ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை?

 
Tamilisai

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை தமிழிசை சௌந்தர்ராஜன் ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. 

tamilisai

தெலங்கானா மாநில ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். இரு மாநிலங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிப்பார் தமிழிசை. தமிழக பாஜக மாநில தலைவராக பதவி வகித்த தமிழிசை சௌந்தரராஜன் இன்றுவரை எம்.பி. , எம்.எல்.ஏ., ஆகிய அனைத்து முயற்சிகளிலும் தோல்வியடைந்து , இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும், நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தோல்வியுற்றார். 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் , தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மகள் கனிமொழி கருணாநிதியை எதிர்த்து தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவர் மாநிலம் முழுவதும் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் விரிவான பிரச்சாரம் செய்தார்.

tamilisai

இந்நிலையில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், மக்களவைத் தேர்தலில் அவர் களமிறங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.