வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி., சி-56 ராக்கெட் - தமிழிசை,வானதி சீனிவாசன் வாழ்த்து

 
tamilisai

பி.எஸ்.எல்.வி., சி - 56 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் மற்றும் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சிறிய வடிவிலான  மற்றும் வர்த்தக ரீதியிலான பிஎஸ்எல்வி , ஜிஎஸ்எல்வி, எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளை வடிவமைத்து விண்ணில் செலுத்தி வருகிறது.   அந்தவகையில்  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து  காலை 6.30 மணிக்கு   PSLV-C56 ராக்கெட்டை விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டானது  சிங்கப்பூர் நாட்டின் DS-SAT புவிநோக்கு செயற்கைகோள் உள்பட வெலாக்ஸ்-ஏஎம், ஆர்கேட், ஸ்கூப் II, கலாசியா - 2  மற்றும் ஓஆர்பி-12 ஸ்ட்ரைடர் உள்ளிட்ட  7 சிறிய ரக செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. இதனிடையே 7 செயற்கைகோள்களும் புவியின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 


இந்நிலையில், பி.எஸ்.எல்.வி., சி - 56 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இருக்கும்  இஸ்ரோவுக்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி - 56 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இருக்கும்  இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


இதேபோல் பி.எஸ்.எல்.வி. சி - 56 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.