" என் அன்புக்குரிய தங்கை தமிழிசைக்கு பிறந்தநாள் வாழ்த்து" - முதல்வர் ஸ்டாலின், ஈபிஎஸ் ட்வீட்!!

 
tn

தமிழிசை சௌந்தரராஜன் பெண் அரசியல் தலைவர்களில் தனிக்கென தனி இடத்தை பிடித்தவர். பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பதவி வகித்த இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் மகளாவார்.

tamilisai

பாரதிய ஜனதா கட்சியில் மாநில பொதுச்செயலாளர், துணைத்தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த இவர்  தமிழகப் பாரதிய ஜனதா கட்சியின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பெற்றவர்.  அவரின் உழைப்பு கிடைத்த பலனாக தற்போது தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகவும் பணியாற்றி வருகிறார். இந்த சூழலில் தமிழிசை இன்று தனது 61ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை  தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் மாண்புமிகு ஆளுநரும், எப்போதும் என் அன்புக்குரிய தங்கையுமான திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் 
 அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.


அதேபோல் அதிமுக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "மேதகு தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் பாண்டிச்சேரி ஆளுநர்(கூடுதல் பொறுப்பு) டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்,அன்பு சகோதரி மேதகு தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் பொதுவாழ்வு சிறந்து பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். " என்று குறிப்பிட்டுள்ளார்.