விஜய்க்கு இது கடைசி படமா? தண்ணீரில்தான் எழுத வேண்டும்- தமிழிசை

 
விஜய்க்கு இது கடைசி படமா? தண்ணீரில்தான் எழுத வேண்டும்' - தமிழிசை

விஜய்க்கு இது கடைசி படமா? தண்ணீரில்தான் எழுத வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார். ஆனால் இது கடைசி படமா என்பதுதான் தெரியவில்லை. இவர்கள் சொல்வதையெல்லாம் தண்ணீரில்தான் எழுத வேண்டும். மாநாட்டை விஜய் சிறப்பாக நடத்திவிடுவார். சினிமாத்துறையினருக்கு கூட்டம் கூடிவிடும். மக்கள் சினிமாவுக்கு வருவதுபோல் வந்துவிடுவார்கள். கூட்டத்தை கூட்டி மாநாடு நடத்திவிடலாம்.. ஆனால் கட்சியை இனிமேல் எப்படி நடத்தப்போகிறார் என்பதைதான் பார்க்க வேண்டும். ஒரு குட்டி திராவிட கட்சியைப் போலதான் விஜயின் கட்சி இருக்கிறது. பெரியாரையும் கும்பிடுகிறார்கள், கடவுளையும் கும்பிடுகிறார்கள். நேரம் காலம் பார்த்துதான் எல்லாவற்றையும் செய்கிறார்கள். திமுக எதை செய்கிறதோ, அதேபோலத் தான் விஜய்யின் கட்சியும் செய்கிறது. திமுகவ் போல் விஜய் கட்சியும் இரட்டை வேடம் போடுகிறது.

திருமாவளவனை ஒரு நாகரிகமான அரசியல்வாதி என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் மேடையில் அவரின் இமேஜ் சுக்குநூறாக உடைந்துவிட்டது. இன்னொரு தலைவரை இப்படியெல்லாம் பேச முடியும் என்பது வக்கிரத்தின் அடையாளம்” என்றார்.