சீமான் பேசிய ஒவ்வொரு கருத்தும் காலம் காலமாக பாஜக பேசிய கருத்து தான்- தமிழிசை

 
தமிழிசை தமிழிசை

தமிழ்நாடு முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பாஜக தொண்டர்கள் உடன் பொங்கல் வைத்து இன்று கொண்டாடினார். பாஜக தொண்டர்கள் சூழல் நின்று பொங்கலோ பொங்கல் தாமரை பொங்கல், பாஜக பொங்கல், அக்கா பொங்கல் என தொண்டர்கள் கோஷமிட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது கணவர் உடன் பொங்கல் வைத்து மகிழ்ந்தார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துகள். பொங்கல் பரிசோடு சாமானிய மக்களுக்கு ஆரம்பித்திருக்க வேண்டிய பொங்கல், தமிழ்நாடு மக்களுக்கு ஏமாற்றத்தோடு ஆரம்பித்திருக்கிறது. கடந்த ஆட்சியில் பொங்கல் பரிசு அதிகமாக அளிக்க வேண்டும் கூறிய முதலமைச்சர் தற்போது ஒரு ரூபாய் கூட தற்போது கொடுக்காதது கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள். ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் அனைத்து கட்சிகளும் புறக்கணித்துள்ளது திமுகவை அனைத்து கட்சிகளும் புறக்கணித்துள்ளது என்றுதான் அர்த்தம். பாஜகவின் போட்டியை ஏற்றுக்கொள்ளும் தகுதி திமுகவுக்கு இல்லை. திமுக உடனான போருக்கு பாஜக தயாராக இல்லை. போர்க்களத்தில் திமுக நேர்மையான போர்வீரன் அல்ல, முதுகில் குத்துபவர்கள். 


பெரியார் குறித்து விமர்சித்த சீமான் மீது திராவிடக் கட்சிகள் கடுங்கோபத்தில் உள்ளன. சீமான் எங்களுக்கு பி டீம் இல்லை. பெரியார் பிம்பத்தை உடைப்பவர்கள் யாராக இருந்தாலும் அது சரியென்று கூறுவோம். பெரியார் சமூக சீர்திருத்தவாதி, இல்லையென்று சீமான் கூறியது வரவேற்கத்தக்கது. சீமான் பேசிய ஒவ்வொரு கருத்தும் காலம் காலமாக பாஜக பேசிய கருத்து தான். எங்களுக்கு மகிழ்ச்சி. இனி பெரியாரின் பிம்பம் ஒவ்வொன்றாக உடையும். தைப் பிறந்தால் வழி பிறக்க வேண்டும், தமிழ்நாட்டிற்கு 'வலி' பிறக்க கூடாது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல். வெற்றுத் தேர்தல்” எனத் தெரிவித்தார்.