#BREAKING ஆளுநர் பதவியை துறந்தார் தமிழிசை ; மக்களவைத் தேர்தலில் போட்டி

 
tamilisai tamilisai

தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை செளந்தரராஜன்.

Tamilisaiதெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை செளந்தரராஜன். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார் தமிழிசை சௌந்தரராஜன்.

tamilisai modi

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ள அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். தென்சென்னை, திருநெல்வேலி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் ஒன்றில், பாஜக வேட்பாளராக தமிழிசை போட்டியிட உள்ளார். தமிழக பாஜக மாநில தலைவராக பதவி வகித்த தமிழிசை சௌந்தரராஜன் இன்றுவரை எம்.பி. , எம்.எல்.ஏ., ஆகிய அனைத்து முயற்சிகளிலும் தோல்வியடைந்து , இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும், நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தோல்வியுற்றார். 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் , தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மகள் கனிமொழி கருணாநிதியை எதிர்த்து தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.