விஜய் கட்சி கொடியில் நல்ல வேல தாமரை இல்லை... இருந்திருந்தா நாங்களும்? - தமிழிசை சூசகம்

 
தமிழிசை

கமலாலயத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பயிற்சி முகாம் தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட  கூட்டத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டார். 

Actor Vijay unveils TVK flag; what do its colour and emblem signify? |  Chennai News - Times of India

அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன், “செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்க இருக்கிறோம். பாஜகவின் முதல் உறுப்பினராக பாரத பிரதமர் இணைய உள்ளார். ஏற்கனவே இந்தியா அளவில் 11 கோடி உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியில் உள்ளனர். தமிழகத்தில் 41 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். மிகப்பெரிய கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உருவெடுத்து வருகிறது. ஏற்கனவே உள்ள உறுப்பினர்களை விட இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்பது எங்களது இலக்கு. ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்பது எங்களது இலக்கு. அதற்கான ஆரம்பக் கூட்டம் இன்று கமலாலயத்தில் நடைபெற்றது.

நடிகர் விஜய் கட்சியால் பாஜகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை : தமிழிசை  சௌந்தரராஜன் | Times Now Tamil

தமிழகத்தில் சேர்க்கப்படும் உறுப்பினர்கள் ஆரோக்கியமான மாற்று அரசியலை முன்னெடுத்துச் செல்வார்கள். அதற்கான ஆரம்பக் கூட்டம் இன்று நடைபெற்றது. எப்படி நாங்கள் உறுப்பினர் சேர்க்கையை ஆரம்பித்திருக்கிறோமோ.. அதே போன்று தம்பி விஜய் தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியுள்ளார். தனது பாடலை அறிமுகப்படுத்தியுள்ளார் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் நிறைய அரசியல் தலைவர்கள் உருவாக வேண்டும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து கொள்கை அறிவித்தத்துகு பிறகு விவாதங்கள் வரலாம். ஆனால் கொடியில் இருக்கும் பூ வாகை மலரா அல்லது தூங்குமூஞ்சி மலரா யானையை போட்டாது சரியா இல்லையா என்று விவாதம் நடக்கிறது.  குங்குமமும் மஞ்சளும் போல எப்படியோ கொடி மங்களகரமாக உள்ளது. விஜயின் கட்சிக்கொடியில் வாகை மலர்தான் இருந்தது தாமரை மலர் இல்லை. தாமரை மலர் இருந்திருந்தால் நாங்களும் எங்களது கருத்துக்களை பதிவு செய்திருப்போம்” என்றார்.