கூட்டணி குறித்து அண்ணாமலை பேசக்கூடாதா?- சுதாகர் ரெட்டியிடம் தமிழிசை கூறியது என்ன?
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற அண்ணாமலையே காரணம், அதுபோன்ற நிலை மீண்டும் வரக்கூடாது. ஆகவே கூட்டணி குறித்து பொதுவெளியில் அவர் கருத்து கூறக்கூடாது என பாஜக இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியிடம் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அண்ணாமலை குறித்து குற்றம் சாட்டியதாக வெளியான தகவலுக்கு மறுப்பு கூறியுள்ள தமிழிசை செளந்தரராஜன், “இன்று காலை மரியாதைக்குரிய பாஜகவின் இணை பொறுப்பாளர் திரு சுதாகர் ரெட்டி அவர்கள் என் இல்லத்திற்கு வந்திருந்தார்கள் நாங்கள் இருவரும் அரசியல் ரீதியாக சில. கருத்துகளை பரிமாறிக் கொண்டோம எப்போதும் போல இது ஒரு சாதாரண சந்திப்பு தான் குறிப்பாக மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் அவர்களின் 11 ஆண்டுகால சாதனையை தமிழக மக்களிடம் எடுத்துச் செல்வதை பற்றி தான் எங்களது விவாதம் இருந்தது.. ஆனால் கட்சிக்குள்ளும் கூட்டணிக் கொள்ளும் குழப்பம் ஏற்படுத்தும் அளவிற்கு சன் தொலைக்காட்சி ஒரு செய்தியை ஒளிபரப்பி இருக்கிறார்கள் இது ஊடக தர்மம் அல்ல அதிகாரபூர்வமில்லாத ஒரு செய்தியை இப்படி தெரிவிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.. இந்த மறுப்பு செய்தியை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


