அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்!!

 
ttn

அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்ற நிலையில் , இன்று அதிமுகவின் செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.  இக்கூட்டத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கி உள்ளனர்.  இக்கூட்டத்தில் புதிய அவைத்தலைவர் தேர்வாவதுடன்,  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ,உட்கட்சி பூசல், வேதா நிலையம்  விவகாரம்,  வெள்ள நிவாரணம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

admk

இந்நிலையில்  மதுசூதனன் மறைவையொட்டி  அதிமுகவின் தற்காலிக தலைவராக தமிழ்மகன் உசேன் தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் தற்காலிக தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் அவைத் தலைவருக்கு மட்டுமே உள்ள நிலையில், தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.  சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த  அன்வர்ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் , சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த தமிழ்மகன் உசேனுக்கு  அவைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ttn

முன்னதாக அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்ததை ஒட்டி புதிய அவைத் தலைவரை தேர்வு செய்ய தடை விதிக்க கோரி அதிமுக உறுப்பினர் சூரிய மூர்த்தி என்பவர் கடந்த சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கட்சியின் சட்ட விதிகளுக்கு புறம்பாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் பொதுக்குழுவை கூட்ட முடிவு செய்திருப்பதாகவும் , உட்கட்சி தேர்தல் நடத்தி , தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மூலமாக மட்டுமே அவைத்தலைவர் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த சூழலில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பதற்காக தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இவர் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.