வக்ஃபு சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்!

 
stalin

வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

தமிழக சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. இன்றைய அலுவல் தொடங்கியதும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக தனித்தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய பாஜக அரசு, குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களை வஞ்சித்தது. இந்தியை திணித்து இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சிக்கிறது. பாஜக ஆளாத மாநிலங்களை நிதிநெருக்கடி மூலம் வஞ்சிக்கிறது. அந்த வகையில் தற்போது வக்பு வாரிய சட்ட திருத்தம் மூலம் சிறுபான்மையின மக்களை வஞ்சிக்கிறது.