குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை அவமானப்படுத்திய ஸ்டாலின் - வி.பி.துரைசாமி ஆவேசம்

 
vp duraisamy

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வருகை தந்த போது தமிழக முதலமைச்சர் நேரில் சென்று வரவேற்காமல் அவரை அவமானப்படுத்தியுள்ளார் தமிழக பாஜக துணை தலைவர் விபி துரைசாமி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் சட்டம் ஓழுங்கு சீர் கேட்டுள்ளதால், திமுக அரசை கண்டித்து சென்னையில், தமிழக பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, விபி துரைசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர். இதனை அடுத்து மாலையில் மெழுகுவர்த்தி பேரணி செல்லவுள்ளதாகவும் பாஜக அறிவித்துள்ளது. ஓமந்தூரார் எஸ்டேட் முதல் போர் நினைவு சின்னம் வரை மெழுகுவர்த்தி பேரணி செல்லவுள்ளதாக அறிவித்துள்ளனர். 

இந்த நிலையில், உண்ணாவிரத போராட்டத்தின் போது பேசிய தமிழக பாஜக துணை தலைவர் விபி துரைசாமி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வருகை தந்த போது தமிழக முதலமைச்சர் நேரில் சென்று வரவேற்காமல் அவரை அவமானப்படுத்தியுள்ளார் என கூறினார். அமைச்சர் பட்டியலில் கடைசியாக உள்ள மனோ தங்கராஜை வரவேற்க அனுப்பியுள்ளார் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.