தொகுதி வாரியாக பாஜக பொறுப்பாளர்களை நியமிக்க அண்ணாமலை உத்தரவு!

 
K Annamalai

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் பாஜகவிற்கு விரைவில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்  செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், இதன் எதிரொலியாக பாஜக-அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டடது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இனிமேல் ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை எனவும் அதிமுக அறிவித்தது.. நாடாளுமன்றம் மட்டுமல்ல, சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அறிவித்தது. இதனையடுத்து பாஜக தமிழகத்தில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக பாஜக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

bjp

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் பாஜகவிற்கு விரைவில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி வாரியாக பாஜகவிற்கு பொறுப்பாளர்களை நியமிக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறாது.  10 நாட்களுக்குள் தொகுதி வாரியாக வேட்பாளர்களை அடையாளம் கண்டு, தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பொறுப்பாளர்களை நியமிக்க உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடந்த பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தொகுதி வாரியாக தேர்தல் பொறுப்பாளர்களை நியமிக்க ஆலோசனை  நடைபெற்றதாக கூறப்படுகிறது. தொகுதி வாரியாக சிறப்பாக செயல்படும் பாஜக நிர்வாகிகள் குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டு தேசிய தலைமையிடம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.