அறுவடைக்கு தயாரான பயிரை அழித்து நாசம் செய்வது சரியில்லை - அண்ணாமலை

 
Annamalai

என்.எல்.சி. விரிவாக்கத்திற்காக அறுவடைக்கு தயாரான பயிரை அழித்து நாசம் செய்வது சரியில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிர்வாகம் 2வது நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக, மேல் வளையமாதேவி பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இதற்காக நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்ட வயலில், ஜேசிபி இயந்திரங்களை இறக்கி நெற்பயிர்களை அழித்து, கால்வாய் வெட்டும் பணிகளை தொடங்கியது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இதனால் அப்பகுதியில் போராட்டம் வெடித்தது. என்எல்சி நிர்வாகத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  நெய்வேலியில் என்எல்சிக்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர். இதன் காரணமாம நேற்று என்.எல்.சி. நிறுவனம் கால்வாய் வெட்டும் பணிகளை நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில், என்.எல்.சி. நிறுவனம் மீண்டும் கால்வாய் அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளது. 

இந்த நிலையில், அறுவடைக்கு தயாரான பயிரை அழித்து நாசம் செய்வது சரியில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களின் குழந்தைகளுக்கு பணி வழங்க வேண்டும். அறுவடைக்கு தயாரான பயிரை அழித்து நாசம் செய்வது சரியில்லை என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பாஜக ஆட்சியில் தான் தமிழ்நாடு மீனவர்கள் கைது நடவடிக்கை எடுத்துள்ளது. கச்சதீவு, நெடுந்தீவு பகுதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்த வருகிறது. இவ்வாறு கூறினார்.