முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

 
cabinet

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டமானது காலை 10.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் செயல்படுத்தப்படவுள்ள முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மகளிர் உரிமை தொகை திட்டம், புதிய தொழில் நிறுவனங்களை கொண்டு வருவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

இதேபோல் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், அமைச்சர் பொன்முடி வீடுகளில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனை குறித்தும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்தும் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.