புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!

 
mk stalin mk stalin

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரங்கசாமி இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி ரங்கசாமிக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அவரது தொண்டர்கள் ரங்கசாமியின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். திரைப்பட கதாப்பாத்திரங்களுடன் ரங்கசாமியை ஒப்பிட்டு அவருக்கு கட் அவுட்டுகள் மற்றும் பேனர்கள் வைத்து அவரது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். புதுச்சேரின் பல்வேறு பகுதிகளிலும் ரங்கசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 


இந்த நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் திரு. என். ரங்கசாமி அவர்களது பிறந்தநாளில் அவர் என்றும் மகிழ்ச்சியுடனும் நல்ல உடல்நலத்துடனும் திகழ எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிபிட்டுள்ளார்.