நமது கனவுகளை குழந்தைகள் மேல் ஏற்றாமல், அவர்களது கனவுகள் ஈடேற துணை நிற்போம் - முதலமைச்சர்

 
stalin

நமது கனவுகளைக் குழந்தைகள் மேல் ஏற்றாமல், அவர்களது கனவுகள் ஈடேறத் துணை நிற்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழலை மாறாத சிரிப்புடன் - கற்பிதங்கள் இல்லா உள்ளத்துடன் உலகையும் - சக மனிதர்களையும் எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக நம்மை வடிவமைத்துக் கொள்வது ஒவ்வொரு பொறுப்புள்ள மனிதரின் கடமை. நமது கனவுகளைக் குழந்தைகள் மேல் ஏற்றாமல், அவர்களது கனவுகள் ஈடேறத் துணை நிற்போம்! வளமான - நலமான - பசுமையான உலகில் குழந்தைகளை வளர்ப்போம் என்ற உறுதியை #ChildrensDay வாழ்த்தாகத் தெரிவிப்போம்.


நமது உலகையும் - வாழ்வையும் ஒளிபெறச் செய்யும் குழந்தைகளுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.