குல தொழில்முறையை ஊக்குவிக்கும் திட்டங்கள் எந்த வடிவில் வந்தாலும் ஆதரிக்க மாட்டோம் - முதலமைச்சர்
குலத் தொழில்முறையை ஊக்குவிக்கும் திட்டங்கள் எந்த வடிவில் வந்தாலும் ஆதரிக்க மாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சாதிய அடிப்படையிலான தொழில்முறையை வலுப்படுத்தும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தைத் தற்போதைய வடிவில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது. அதற்குப் பதிலாக, 'சமூகநீதி அடிப்படையிலான - சாதியப் பாகுபாடற்ற - அனைத்துக் கைவினைக் கலைஞர்களுக்கும் முழு ஆதரவளிக்கும்' விரிவான திட்டத்தைத் தமிழ்நாடு அரசு உருவாக்கும்.
குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து வென்ற தலைவர்களின் கொள்கை வாரிசுகளான நாங்கள், குலத் தொழில்முறையை ஊக்குவிக்கும் திட்டங்கள் எந்த வடிவில் வந்தாலும் ஆதரிக்க மாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.