ஒண்டி வீரன் தமிழ் நிலத்தின் போர்க்குணத்திற்கு தலைசிறந்த சான்று - முதலமைச்சர் புகழாரம்

 
stalin

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தலைவர்கள் பலரும் அவரது தீரத்தை நினைவுகூர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒண்டிவீரனின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தென்மலைப் போர் கண்ட தென்னகத்தின் ஒப்பிலா வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள்! கிழக்கிந்தியப் படைகளைத் தன் மதிநுட்பத்தால் வீழ்த்தி, பிறந்த மண்ணின் மானம் காத்த படைத்தளபதி ஒண்டிவீரன் தமிழ்நிலத்தின் போர்க்குணத்திற்குத் தலைசிறந்த சான்று! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 


இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், அந்நியர்கள்களிடம் அடிமையாய் இருந்து வாழ்வதை விட சண்டையிட்டு சாவது மேல் என வீரப்போர் புரிந்த மாமன்னர் பூலித்தேவனின் முதன்மை படைத்தளபதி மாவீரர் ஒண்டிவீரனின் நினைவு நாள் இன்று‌. தன் நாட்டின் விடுதலைக்காக தனது கடைசி மூச்சுவரை களத்தில் நின்று ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு உயிர்நீத்த மாவீரர் ஒண்டிவீரனின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்கிடுவோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.