கோடநாடு வழக்கில் குற்றவாளிகளை பிடித்து ஜெயிலில் போடுவேன் - முதலமைச்சர் ஆவேசம்

 
Mk Stalin

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் அத்தனை பேரையும் பிடித்து, ஜெயிலில் போடுவேன்  என ஈரோடு பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.  இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார். அந்த தொகுதிக்குட்பட்ட சம்பத் நகரில் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். இதனை தொடர்ந்து காந்தி சிலை பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். 

mk stalin

பின்னர் ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில் பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:  ஜெயலலிதா மரணம் குறித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் விசாரணை கமிஷன் அறிக்கை என்ன நிலை என்பதை மக்களிடத்தில் விளக்கி இருக்கிறோம். இதேபோல் தன்னை வளர்த்து தன்னை ஆளாக்கிய தாங்கள் தலைவராக ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா வீட்டிலேயே கொள்ளையடித்தவர்கள் அவர்கள். கொடநாட்டிலே கொள்ளையடித்தவர்கள் அவர்கள், கொலை செய்தவர்கள் அவர்கள். அந்த விபரம் எல்லாம் விரைவில் வரப்போகிறது. அதற்கு யார் காரணமாக இருந்தாலும் உறுதியாக சொல்கிறேன். அத்தனை பேரையும் பிடித்து ஜெயிலில் போடுவோம். இவ்வளவு அக்ரமங்களையும் செய்துவிட்டு தைரியமாக சுதந்திரமாக இன்று திரிந்து கொண்டு அந்த அம்மா பெயரை சொல்லிக்கொண்டு ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு பேசினார்.