நாட்டை காப்பாற்ற திமுகவினர் தயாராக வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 
cm stalin

நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் வெற்றி பெற்றாக வேண்டும் என திமுகவினர் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

சென்னையில் இன்று காலை திமுக மாநில விவசாய அணி துணைச் செயலாளர் நல்லசேதுபதி இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார். இதேபோல் மணமக்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர். இந்த திருமண விழாவில் திமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

இதனை தொடர்ந்து திருமண நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: இந்தியாவைக் காப்பாற்ற திமுகவினர் அனைவரும் தயாராக வேண்டும். நாட்டை காப்பாற்ற தேர்தலுக்கான பணிகளை விரைந்து செய்ய வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் வெற்றி பெற்றாக வேண்டும். மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்காமல் இருந்தாலும் சிறந்த மாநிலமாக வளர்ந்துள்ளோம். இவ்வாறு பேசினார்.