தமிழக ஆளுநரை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - கே.எஸ்.அழகிரி பங்கேற்பு

 
Congress

காந்தியை இழுவுப்படுத்தி பேசியதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களை இழிவுபடுத்தி பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை  கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் திரு. எம்.ஏ. முத்தழகன், திரு. எம்.எஸ். திரவியம் MC, திரு. ஜெ. டில்லிபாபு MC, திரு. எம்.பி. ரஞ்சன்குமார், திரு. சிவராஜசேகரன் MC, திரு. அடையாறு த. துரை, திரு. துரை சந்திரசேகர், எம்.எல்.ஏ., திரு. ஆர்.எம். தாஸ், திரு. ஆவடி யுவராஜ், திரு. ஆர்.எஸ். செந்தில்குமார், திரு. ஆர். சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலையில், சென்னை சைதாப்பேட்டை, பனகல் மாளிகை  அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.


இதில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் திரு ஆம்ஸ்ட்ராங், மகிளா காங்கிரஸ் தலைவர் திருமிகு சுதா ராமகிருஷ்ணன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு விச்சு லெனின் பிரசாத்,  மாணவர் காங்கிரஸ் தலைவர் திரு சின்னதம்பி, சமூக ஊடகப் துறை தலைவர் திரு கே டி லட்சுமி காந்தன், சிறுபான்மை துறை தலைவர் திரு அஸ்லாம் பாஷா,  துணைத் தலைவர்கள் திரு ஆ கோபண்ணா, திரு பொன் கிருஷ்ணமூர்த்தி , பொதுச் செயலாளர்கள் திரு D. செல்வம், திரு சிரஞ்சீவி, திரு தளபதி பாஸ்கர் மற்றும் மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.