தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது கடினம் - டி.கே.சிவகுமார் பரபரப்பு பேட்டி

 
dk sivakumar dk sivakumar

தற்போதைய சூழ்நிலையில் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது கடினம் தான் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார். 

காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை நாடியது தமிழக அரசு. இதனை தொடர்ந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி நீர் தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை பின்பற்றாத கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும்  காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு இடைக்கால மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரித்ததோடு, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின் படி தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. 

இந்த நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார்,  தற்போதைய சூழ்நிலையில் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பது கடினம் தான். இருப்பினும் உச்சநீதிமன்றாத்தின் தீர்ப்பையும் மதிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களையும் பின்பற்றி, மாநிலத்தின் நலனுக்கு எது நல்லோது அதை நாங்கள் செய்வோம். அதுவே எங்கள் கடமை. இவ்வாறு கூறினார்.