லஞ்ச ஒழிப்பு துறையின் அடுத்த வேட்டை... 52 கல்லூரிகளுக்கு திடீர் சம்மன் - வெளியான திடுக் தகவல்!

 
லஞ்ச ஒழிப்பு துறை

திமுக அரசு பொறுப்பேற்ற உடனே அதிகார மட்டத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்தது. குறிப்பாக லஞ்ச ஒழிப்பு துறையை தான் பலப்படுத்தியது. இன்று மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா குஜராத் அமைச்சராக இருந்தபோது, செராபுதீன் வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தார். அப்போது அந்த வழக்கை விசாரித்தது தமிழ்நாட்டைச் சேர்ந்த கந்தசாமி ஐபிஎஸ். சிபிஐயில் பணிபுரிந்த அவர், வாரன்ட் பெற்று அமித் ஷாவை கைது செய்தார். அவரை லஞ்ச ஒழிப்பு துறைக்கு தலைவராக நியமித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

லஞ்ச ஒழிப்பு துறை

இவ்வாறு ஒவ்வொரு நியமனமும் பார்த்து பார்த்து செய்யப்பட்டது. அது ஏன் என்பதற்கான காரணம் முன்னாள் அமைச்சர்களின் வீடுகள், அவர்களுக்குச் சொந்தமான இடங்கள், சொந்தக்காரர்களின் வீடுகள் என பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில் தெரியவந்தது.அதேபோல முன்னாள் அமைச்சர்களுக்கு வலதுகரம், இடதுகரமாக இருந்த அரசு அதிகாரிகளின் வீடுகளிலும் ரெய்டுகள் தொடர்ந்தன. தற்போது கல்லூரிகளில் அதிரடி வேட்டையை தொடங்கியிருக்கிறது.

கந்தசாமி ஐ.பி.எஸ்

கடந்த அதிமுக ஆட்சியில் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் கல்வி உதவித் தொகையில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்து உள்ளது. இந்த புகார்களின் அடிப்படையில் தணிக்கை துறை விசாரணை செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் கல்வி உதவித் தொகையில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து 52 கல்லூரி முதல்வர்கள் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறை சம்மன் அனுப்பியுள்ளது.