மின்சார கட்டணம் செலுத்தும் மோசடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இதனை செய்யுங்கள்!

 
EB

மின்சார கட்டணம் செலுத்தும் மோசடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சில குறிப்புகளை தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பலர் மின்கட்டணத்தை இணையதளம் வாயிலாக செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அவ்வாறு மின்கட்டணம் செலுத்துபவர்களை சில மோசடி பேர்வழிகள் ஏமாற்றி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக மின்சார வாரியம் மின்நுகர்வோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள பதிவில்,  குறுஞ்செய்தி வந்த எண்ணை சரிபார்க்கவும். நம்பகமற்ற எண்ணாக இருந்தால் புறக்கணிக்கவும். செய்தியில் எழுத்து பிழைகள் இருக்கும்.


சைபர் பாதுகாப்பு இலச்சினையான https:// மற்றும் பூட்டு  இல்லாமல் இருக்கும். தொடர்பு கொள்பவர் வேற்றுமொழி உச்சரிப்புடன் பேசுவர். சிறிய தொகையான ₹10 மட்டும் செலுத்தினால் போதும் என்று கூறுவர். உடனே எச்சரிக்கை ஆகி புகார் அளிக்கப்படும் எனக் கூறி இணைப்பை துண்டிக்கவும். புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.