அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயம் - தமிழக அரசு அறிவிப்பு..

 
tn govt

தமிழ்நாடு முழுவதும் அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான அரசின் கொள்கை குறிப்பில், “தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளிலும் கண்ணாடி இழை வடம் மூலம் அதிவேக இணைய இணைப்புகளை உறுதி செய்வதில் பாரத் நெட் திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியான தமிழ்நெட் மாநிலத்தில் உள்ள அனைத்து நகர்புறங்களையும் இணைக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. TNSWAN, BHARATNET மற்றும் TAMILNET ஆகியவற்றை உள்ளடக்கி ஒருங்கிணைந்த டிஜிட்டல் உட்கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்படும்.

இந்தத் தகவல் தொழில்நுட்ப கட்டடமானது மே மாதம் திறக்கப்பட உள்ளது. எல்கோசெஸ்- விளாங்குறிச்சி, கோயம்புத்தூர் எல்காட் சிறப்பு பொருளாதார மண்டபத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களின் இட தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு, மேலும் 2.66 சதுர அடி பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் ரூபாய் 114.16 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயம் - தமிழக அரசு அறிவிப்பு..

தலைமைச் செயலகத்தில் இணைய தாக்குதலை தடுக்க சுமார் 2,533 கணினிகள் அடையாளம் காணப்பட்டு முழுமையாக ஸ்கேன் செய்யப்பட்டன. சுமார் 813 கணினிகளில் வைரஸ் தடுப்பு மென்பொருள் நிறுவப்பட்டுள்ளது. ஆதார் நிரந்தரப் பதிவு மையங்கள் மூலம் 31-01-2023 வரை 87,89,309 ஆதார் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களுக்கான மடிக்கணினி, கையடக்க கணினி வழங்கும் பணிகளையும் எல்காட் மேற்கொள்கிறது.

தமிழ்நாடு சட்டமன்றப் பதிவுகளை மின்மயமாக்குதல் மற்றும் மேலாண்மை செய்தல், முதற்கட்டமாக 1921ம் ஆண்டு முதல் இன்றைய தேதி வரையிலான புத்தகங்களை மின்னணுமயமாக்கும் பணியானது 16.11.2023 க்குள் நிறைவடையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.