அருமையான வாய்ப்பு...ஊரகப்பகுதி மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வு...

 
assembly

தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், 2024-2025 ஆம் கல்வியாண்டில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவ / மாணவியர்கள் 2024 டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி (சனிக்கிழமை ) நடைபெறவுள்ள ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு (TRUST) விண்ணப்பிக்கலாம் 61601 அறிவிக்கப்படுகிறது. 1. அரசு ஆணை (நிலை) எண்.960, கல்வித் (இ2) துறை, நாள்.11.10.91-ன் படி ஊரகப் பகுதிகளில் (அதாவது கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப்), அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2024 -2025 கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர் இத்திறனாய்வுத் தேர்வு எழுதுவதற்கு தகுதி உடையவராவார்கள்.

2. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/- மிகாமல் உள்ளது என்பதற்கு வருவாய் துறையினரிடமிருந்து வருமான சான்று பெற்று அளித்தல் வேண்டும். 3. தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர் www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, தேர்வுக்கான கட்டணம் ரூ.5/- சேவைக் கட்டணம் ரூ.5/- என மொத்தமாக ரூ.10/-னை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பணமாக பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

தேர்விற்கு விண்ணப்பிக்க 12.11.2024 முதல் 20.11.2024 வரை என கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 தேர்வர்களுக்கு (50 மாணவியர் + 50 மாணவர்) 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தொடர்ந்து படிக்கும் காலத்திற்கு படிப்புதவித் தொகை ஆண்டு தோறும் ரூ.1000/- வீதம் வழங்கப்படும்.  நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்க முடியாது.