கல்வி நிதி விவகாரம் - மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
தமிழகத்திற்கு தர வேண்டிய கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ள மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
நாடு முழுவதும் புதிய கல்விகொள்கையை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. இந்த கல்விக்கொள்கையை கட்டாயம் அனைத்து மாநிலங்களும் ஏற்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதனையடுத்து பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் புதிய கல்விக்கொள்கை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேவேளையில், தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புதிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்து வருகின்றன. இதனால் தமிழகத்திற்கு தர வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்திற்கு தர வேண்டிய கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ள மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்வி நிதியை விடுவிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை, சமக்ரா சிக்ஷா திட்டத்துக்கான நிலுவை நிதி வழங்கப்படவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சமக்ரா திட்டத்துக்கான நிதியை 6% வட்டியுடன் 2,291 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு
தனது மனுவில் தெரிவித்துள்ளது.


