சென்னை மாநகருக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை மாநகருக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில் பருவமழை காலங்களில் மிகவும் பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாக சென்னை உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பருமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இருந்த போதிலும் பருவமழை காலங்களில் சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
இந்த நிலையில், சென்னை மாநகருக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் பேரிடர் மேலாண்மை ஆணையத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியது. சென்னை ஆட்சியர், காவல் ஆணையர், துணை ஆணையர், நல அலுவலர், சி.எம்.டி.ஏ. தலைமை செயல் அதிகாரி, நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் உள்ளிட்டோர் ஆணையத்தில் இருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


