பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு அனுமதி கட்டணம் ரத்து - தமிழக அரசு அரசாணை

 
assembly

பேட்டரி மூலம் இயக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அனுமதி கட்டணம் ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. 

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை காரணமாக ஏராளமான வாடிக்கையாளர்கள் பேட்டரி வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். இதேபோல் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் அரசும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வரி சலுகைகளை அளித்து வருகிறது. இந்நிலையில், பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு அனுமதி கட்டணம் ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. மெத்தனால், எத்தனால், பேட்டரி வாகனங்களுக்கு எந்த அனுமதி கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றி அனுமதி கட்டணத்தை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

மெத்தனால், எத்தனாலில் இயக்கப்படும் போக்குவரத்து வாகனங்களுக்கும் அனுமதி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சரக்கு வாகனம் தவிர 3,000 கிலோ எடைக்கு குறைவான வாகனங்களுக்கும் அனுமதி கட்டணம் ரத்து செய்துள்ளனர்.