திசை திருப்பும் திமுகவின் சித்து விளையாட்டு எடுபடாது - முஸ்தபா
தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக இஸ்லாமியர்களை திசை திருப்பும் திமுகவின் சித்து விளையாட்டு எடுபடாது என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிவித்துள்ளார். தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழக கூட்டணியில் இணையும் எனவும் முஸ்தபா அறிவித்தார்.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக இஸ்லாமியர்களை திசை திருப்பும் திமுகவின் சித்து விளையாட்டு எடுபடாது என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களுக்கு தவெக அங்கீகாரம் கொடுக்கவில்லை என பொய் செய்தியை பரப்பி வருகின்றனர் எனவும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் முஸ்தபா தெரிவித்தார்.


