வேளாண் மண்டல உறுப்பினர்கள் பதவியை ஆக்கிரமித்த திமுக எம்.எல்.ஏக்கள்

 
டிஆர்பி ராஜா

விவசாயிகளை அச்சுறுத்திய மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளை தற்காத்துக்கொள்ள, டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துச் சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதற்காக பல போராட்டங்களும் நடந்தன. 

Image

இதனையடுத்து கடந்த 2020 பிப்ரவரி மாதம், காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார் அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதற்கான சட்ட முன்வடிவும் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் டெல்டா மக்கள் ஓரளவுக்கு நிம்மதி அடைந்தாலும்கூட, ஆங்காங்கே எண்ணெய்-எரிவாயு கிணறு விரிவாக்கம், கெயில் குழாய் பதிப்பு போன்ற அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் முதல்வரை தலைவராக கொண்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேலாண்மை ஆணையர், உறுப்பினர்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. புதிய உறுப்பினர்களாக திருவாரூர் திமுக எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன், தஞ்சை  எம்.பி. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா  நியமிக்கப்பட்டுள்ளார்.