அனைத்து வகைப் பள்ளிகளின் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பதவிக் காலம் நீட்டிப்பு!

 
assembly

பள்ளிக் கல்வித் துறையில் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளின் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பதவிக் காலம் நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறையின்கீழ் செயல்படும் அரசுத் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் ஆகிய அனைத்து வகைப் பள்ளிகளின் சீரான செயல்பாடுகளுக்குத் துணைபுரியும் வகையில், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல், ஜூலை மாதங்களில் திருத்தி அமைக்கப்பட்டன.

இந்த அனைத்து வகைப் பள்ளிகளின் மேலாண்மைக்குழு உறுப்பினர்களுடைய பதவிக் காலம் 2024 ஏப்ரல், மே, ஜூலை மாதங்களில் முடிவடைய உள்ளன.
2024-2025 ஆம் கல்வியாண்டில் புதிதாகச் சேரும் மாணவர்களின் பெற்றோர்களையும் உள்ளடக்கிய புதிய பள்ளி மேலாண்மைக் குழுக்களை அமைக்கும் பொருட்டு, 2022-2024 ஆம் ஆண்டிற்கான தொடக்கப் பள்ளிகளுக்கான மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் 1-5-2020 முதல் 10-8-2024 வரையும், நடுநிலைப் பள்ளிகளுக்கான மேலாண்மைக்கு உறுப்பினர்களின் பதவிக் 20-7-2024 காலம் 24-4-2024 முதல் வரையும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் 10-7-2024 முதல் 17-8-2024 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும், இதற்குரிய அரசாணை 29-2-2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது என்றும் பள்ளிக் கல்வித்துறை அரசுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.