அரசு பேருந்தில் கோடை ஜாக்பாட் - 20 முறை இலவச பயணம்!
Apr 28, 2025, 12:35 IST1745823901860
அரசு விரைவுப் பேருந்துகளில் கோடை காலத்தில் பயணித்தால் குலுக்கல் முறையில் 20 முறை வரை இலவச பயணப் பரிசு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அரசு விரைவுப் பேருந்துகளில் கோடை காலத்தில் பயணித்தால் குலுக்கல் முறையில் 20 முறை வரை இலவச பயணப் பரிசு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் ஒன்று முதல் ஜூன் 15 வரை பயணிப்பவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பரிசாக 25 பேர் ஓராண்டுக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் 20 முறை முன்பதிவு செய்து இலவசமாக பயணிக்கலாம். 2ஆம் பரிசாக 25 பேர் 10 முறையும், 3ஆம் பரிசாக 25 பேர் 5 முறையும் இலவசமாக பயணிக்கும் பரிசை வெல்ல வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்து பயணிக்கும் 75 பயணிகளுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்பட உள்ளது.


