அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!
தெற்கு அந்தமான், நிக்கோபார் தீவு, தென்கிழக்கு வங்கக் கடலில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரையில் பெரும்பாலான மழை தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் கிடைக்கிறது. தமிழகத்தில் மட்டும் தான் வடகிழக்கு பருவமழை அதிக மழையை தருகிறது. இந்த நிலையில், தெற்கு அந்தமான், நிக்கோபார் தீவு, தென்கிழக்கு வங்கக் கடலில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் இந்தாண்டு முன்கூட்டியே வரும் 27 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


