தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை - வானிலை ஆய்வு மையம் தகவல்!!

 
rain

தமிழகத்தின் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை நிலவும்.

rain

நாளை தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு மலை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 1-ஆம் தேதி முதல் மூன்றாம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை. காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

rain

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் . நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும்  வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்படவில்லை.