தமிழகத்தில் காலை 10 மணி வரை 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

 
rain

தமிழகத்தில் காலை 10 மணி வரை 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு  உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. 

rain

இந்த நிலையில், தமிழகத்தில் காலை 10 மணி வரை 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், நெல்லை, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடியிலும்  மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.