"தமிழக வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்" - வானிலை ஆய்வு மையம் தகவல்!!

 
rain rain

தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.  நாளை முதல் வருகிற 22-ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

rain

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் . நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 28 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  அதிகபட்ச வெப்பநிலை 29,  குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

rain

கடந்த 24 மணி நேரத்தில் எண்ணூரில் 5 செமீ., திருத்துறைப்பூண்டியில் 4 செமீ.,  எம்ஜிஆர் நகர் 3 செமீ.,  எம்ஆர்சி நகர், ஒய்எம்சிஏ, நந்தனம் ,சென்னை நுங்கம்பாக்கம் ,காரைக்கால் ஆகிய இடங்களில்  2 செமீ.,  மழை பெய்துள்ளது. மீனவர்களுக்கான எந்த எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்படவில்லை.