வளிமண்டல கீழடுக்கு சுழற்சி... 14 மாவட்டங்களில் மழை பெய்யும்!!

 
rain

உள்தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை கடலோர மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களான ராணிப்பேட்டை, வேலூர் ,திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ,கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் ,திருச்சி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

rain

நாளை மறுநாள் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். வருகிற 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

rain

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். வருகிற 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.  இதனால் இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.