வளிமண்டல கீழடுக்கு சுழற்சி - இன்று உள்மாவட்டங்களில் மழை!!

 
heavy rain

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்லி ,பஞ்சாப், அரியானா, சண்டிகர் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதே போல் தமிழகத்திலும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், காலையில் வேளையில் பனி மூட்டமும் பரவலாகக் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. 

rain


இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் இன்று உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.நாளை முதல் 10-ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

rain

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் .அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.24  மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு மற்றும் மீனவர்களுக்கான எந்த எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.