தாமிரபரணி ஆற்றில் ஒரு வாரமாகியும் குறையாத வெள்ளம்..

 
தாமிரபரணி ஆறு

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

1

வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆகியவற்றின் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக இதுவரை தண்ணீரையே பார்க்காத ஆறு,  ஏரி,  குளங்கள் கூட நிரம்பி வழிகின்றன. 

மேலும் தாமிரபரணி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான சேர்வலாறு, பாபநாசம், மணிமுத்தாறு மற்றும் கடனா அணை பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தது . அங்கிருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டதால் ,  தாமிரபரணி ஆற்றில் கடந்த சில நாட்களாகவே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

தாமிரபரணி ஆறு

 ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள், ஆற்றில் குளிக்கவோ, விளையாடவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விதிக்கப்பட்டு இருக்கிறது . மேலும் கரையோரம் இருக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இன்று தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் சற்று குறைந்திருக்கும்  போதிலும், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில், தாமிரபரணி ஆற்றில் உள்ள சுடலைமாடசாமி, விநாயகர் உள்ளிட்ட கோவில்கள் வெள்ளத்தில் மூழ்கியவாறே உள்ளன.