பாஜக கூட்டணியில் இணைந்தது தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்
Feb 27, 2024, 11:39 IST6:09:48 AM

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ‘இண்டியா’ என்ற கூட்டணியை அமைத்தன. இருப்பினும் இக்கூட்டணியில் கடந்த சில நாட்களாக பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக, கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம்லீக், கொமதேக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மற்றொரு புறம் அதிமுக கூட்டணியை பலப்படுத்தும் நோக்கில் செயலாற்றி வரும் நிலையில் பாஜக கூட்டணியில் தமாக நேற்று இணைந்தது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்தது ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம். பல்லடத்தில் இன்று நடைபெற உள்ள பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் அக்கட்சித் தலைவர் ஜான் பாண்டியன் .