ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியில் குளறுபடி - தமிழ்நாடு அரசு நடவடிக்கை!!

 
tn

சென்னை பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் தீபா சத்யன் உள்ளிட்டோர்  காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  

tn

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் நேற்று மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை ஏசிடிசி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில் முறையான பாதுகாப்பு அம்சங்கள், வாகன நிறுத்துமிடம், இருக்கை வசதிகள் சரிவர இல்லை, இதனால் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டதாக ரசிகர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் முதல்வர் கான்வாயும் சிக்கியது.  இந்நிலையில் சென்னை பெருநகர கிழக்கு இணை ஆணையர் திசா மிட்டல், பள்ளிக்கரணை துணை ஆணையர் தீபா சத்யன், அமலாக்கப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் அடார்ஷ் பசெரா ஆகிய 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

tn

சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியால் பெரும் சர்ச்சை எழுந்த நிலையில் நிகழ்ச்சியால் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலில் முதல்வரின் வாகனமும் சிக்கியது. இது குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.