127 லட்சம் மெட்ரிக் டன் தானியங்களை உற்பத்தி செய்ய இலக்கு - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

 
mrk

நடப்பு நிதியாண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் தானியங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


2023-24ம் நிதியாண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகளையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் அறிவித்தார். இநிலையில், 2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல், வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.  வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 

2021-22ல் வேளாண் பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்ட பல தொலைநோக்கு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தியதால் 1,930 ஹெக்டேர் வியசாய பரப்பு அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 63.48 லட்சம் ஹெக்டேராக சாகுபடி பரப்பு அதிகரித்தது.நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மகசூலை அதிகரிப்பதே இலக்கு. ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு. கிராமங்கள் தன்னிறைவு பெற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம். ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளின் நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின் இணைப்பு வழங்கப்படும். பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 2021-22ல் 40.74 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 26 லட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர். 127 லட்சம் மெட்ரிக் டன் தானியங்களை உற்பத்தி செய்ய இலக்கு. 2504 ஊராட்சிகளில் ரூ230 கோடியில் தானிய உற்பத்திக்கான திட்டம் செயல்படுத்தப்படும். 15 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு கூறினார்.