இந்த நாட்களில் டாஸ்மாக் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் செயல்படாது!!

 
kanyakumari kanyakumari

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் தினம், வள்ளலார் நினைவு தினம் மற்றும் குடியரசு தினங்களை ஒட்டி டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் செயல்படாது என மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

tasmac

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளுவர் தினம் (16.01.2024), வள்ளலார் நினைவு தினம் (25.01.2024) மற்றும் குடியரசு தினம் (26.01.2024) ஆகிய தினங்களை முன்னிட்டு 16.01.2024, 25.01.2024 மற்றும் தினங்களில் கன்னியாகுமரி 26.01.2024 ஆகிய மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் மற்றும் FL2, FL3, FL3A மற்றும் FL3AA உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.