டாஸ்மாக் விவகாரம்: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை .. ஐகோர்ட் அதிரடி..!!

 
டாஸ்மாக் விவகாரம்: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை .. ஐகோர்ட் அதிரடி..!! டாஸ்மாக் விவகாரம்: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை .. ஐகோர்ட் அதிரடி..!!

டாஸ்மாக் வழக்கில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ர்ம் ரவீந்திரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க  சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

டாஸ்மாக் முறைகேடு வழக்கு  தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.  

ED

இதையடுத்து, அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள்  நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த 13ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது டாஸ்மாக் வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரனிடம் எதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது? வழக்கு விசாரணையின் போது. சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருக்கிறதா?  என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 

அப்போது சீல் வைக்கும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு கிடையாது என ஒப்புக்கொண்டது. அத்துடன் சீலை அகற்றி, நோட்டீஸை எடுத்துவிடுகிறோம் என்று ED அதிகாரிகள் பதில் அளித்தனர். தொடர்ந்து ஜூன் 17ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது , டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம்  ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை சமர்பிக்க உத்தரவிட்டிருந்தனர்.  

high court

இந்நிலையில் இந்த மனு மீது இன்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “டாஸ்மாக் வழக்கு தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இல்லை. நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களில் எந்த ஆதாரமும் இல்லை. இதனால் டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறையின் மேல் நடவடிக்கைக்கு தடை விதிக்கப்படுகிறது. கைப்பற்றிய பொருட்கள் மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை திரும்ப ஒப்படைக்க வேண்டும் ” என்று தெரிவித்தனர்.  அத்துடன் வழக்கின் விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.