ரூ.1,000 கோடி ஊழல்- அமலாக்கத்துறை முன் ஆஜரான டாஸ்மாக் துணை மேலாளர்
டாஸ்மாக் துணைப் பொது மேலாளரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

டாஸ்மாக்கில் நடந்த முறைகேடு வழக்கு தொடர்பாக எம்டி விசாகனின் மணப்பாக்கம் வீட்டில் கடந்த வெள்ளி ,சனி ஆகிய இரண்டு நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதுடன் ஆவணங்களையும் கைப்பற்றி சென்றனர்.
இந்த நிலையில் டாஸ்மாக் நிறுவன துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று ஆஜராகி உள்ளார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு உதவி பொது மேலாளராக பணிக்கு சேர்ந்த ஜோதி சங்கர் தற்போது துணை பொது மேலாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 20 ஆண்டுகளாக கொள்முதல் மற்றும் விற்பனை பிரிவில் முக்கிய நபராக இருந்து வருகிறார்.டாஸ்மாக் மதுபானங்கள் கொள்முதல் விற்பனை மட்டுமின்றி, பில்லிங் மெஷின் வாங்கியது, CCTV கொள்முதல் செய்தது ஆகியவற்றில் இவர்தான் முக்கிய பங்காற்றியவர் என தகவல் வெளியாகி உள்ளது.


